பிக்பாஸ்க்கு தயாரான விஜய் சேதுபதி
தமிழ் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சிக்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் பிரமாண்ட தொடக்க விழா செப்டம்பர் 6 அன்று மாலை 6 மணி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீமிங் செய்யப்ப டுவதோடு, ஸ்டார் விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. பார்வையாளர்கள் ஜியோஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் வீட்டின் உள்ளே நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கலாம். இந்த சீசனுக்கும் விஜய் சேதுபதி மீண்டும் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்., இந்நிகழ்ச்சி தனது முக்கிய மைல்கல்லான மேடை என்றும், 10வது சீசனில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இதற்காக தன்னை முழுமையாக தயார்படுத்தி கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Prev Post
Next Post