Take a fresh look at your lifestyle.

‘ இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

25

‘ இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்
ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்த படத்தில் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு ஷ்ரேஸ்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 4,அன்று திரையரங்கு களில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ், தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.