டிவிஏசி இயக்குநர் ஏ.அருண் வழக்கு:நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் டென்ஷன்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநர் ஏ.அருணுக்கு நீதிமன்ற அழைப்பாணையை (Summons) வழங்குவதற்காக நேற்று அவரது அலுவலகத்திற்குச் சென்ற நீதிமன்ற அமிணா (Bailiff) மதியம் 3:05 மணி முதல் மாலை 5:15 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வைக்கப்பட்ட விவகாரத்தில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்ற ஊழியரை அவ்வளவு நேரம் காக்க வைத்த இயக்குநரின் அலுவலகப் பணியாளர்களை இன்றே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாகக் கோபத்துடன் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக டிவிஏசி இயக்குநர் ஏ.அருண் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானபோதும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் இதுகுறித்து சில விளக்கங்களை அளிக்க முற்பட்டபோதும், சம்பந்தப்பட்ட அந்த அலுவலகப் பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை எதையும் கேட்க நீதிபதி மறுத்துவிட்டார்; நீதிமன்றப் பணியாளரை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரி அலுவலகப் பணியாளர்கள் மீதான உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த அதிரடி நடவடிக்கை சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.