விஜய் ஆண்டனி என்ற பெயர் வைத்ததே எஸ்எஸ்சி தான்: சோபா சந்திரசேகர்
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் சக்தி திருமகன்.இப்படம் அவரது 25-வது படமாக உருவாகியுள்ளது.இதில் ஹீரோயினாக த்ரிப்தி நடிக்க, மேலும் வாகை சந்திர சேகர், சுனில் கிருபவானி, செல் முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படம் வரும் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இதன் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பங்கேற்று பேசியது,விஜய் ஆண்டனியை முதலில் என் கணவர் தான் சுக்ரன் படத்தில் நடிக்க வைத்தார். அப்போது அவர் வேறு ஒரு பெயர் வைத் திருந்தார்.என் கணவர் தான் அதை மாற்றி அவருக்கு விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்தார். எஸ்எஸ்சி ரொம்ப ராசியானவர். அதனால் தான் விஜய் ஆண்டனி இப்போது நன்றாக இருக்கிறார். 25 வது படத்தில் நடித்து விட்டார். அதேபோல் அவர் தேர்வு செய்யும் கதை வித்தியாசமாகவும், ரொம்ப புதுமையாகவும் இருக்கிறது என்றார்.
Next Post