Take a fresh look at your lifestyle.

தீயாக பரவிய சமந்தாவின் போட்டோ

33

தீயாக பரவிய சமந்தாவின் போட்டோ
தமிழ், தெலுங்கு திரை உலகில் கொடி கட்டி
பறந்த சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அதோடு தயாரிப்பாளராக களம் இறங்கி ‘சுபம்’ என்ற படத்தை தயாரித் து வெளியிட்டார். நாகசைதன்யாவை விவகாரத்து செய்த பின் கடந்த சில வருடங்களாக தனிமையில் வசித்து வந்த சமந்தா, கடந்த சில மாதங்களாக பாலிவுட் இயக்குனர் ராஜ் நிதி மோரு உடன் மிக நெருக்கமாக பழகி வருகிறார். இதனால் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவியது .ஆனால் இதை அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் வெளிநாடுகள் மற்றும் பொது இடங்களில் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் சமந்தா ராஜ் நிதி மோருவை கட்டிப்பிடித்தபடி உள்ள
புகைப்படங்களை தற்போது தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த படம் பாலிவுடில் தீயாக பரவி வருகிறது.