கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு நடக்கும் பாராட்டு விழா
கோவாவில், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் 20 முதல் 28ம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள். அந்த வகையில் இதன் நிறைவு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் என அறிவித்துள்ளனர். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங் கள் நடைபெறவுள்ளன
Prev Post
Next Post