பராசக்தி- விமர்சனம்
நாடு முழுவதும் மக்கள் ஹிந்தியை கற்க வேண்டும் என 1954 ல் மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் புறநானூறு புரட்சி படை என்ற அமைப்பை மாணவர்கள் தொடங்கி மத்திய சர்க்காருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு 1964ல் மீண்டும் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அப்போதும் மாணவர்களின் போராட்டம் பெரிதாக வெடித்தது. அப்போது நடந்தது என்ன? அதில் பாதிக்கப்பட்டது யார்?அதில் உள்ள உண்மை என்ன ?என்பது தான் படத்தின் மீதி கதை.
1954 முதல் 1965 வரை இந்தியா முழுவதும் நடைபெற்ற ஹிந்தி திணிப்புக்கு எதிரான மொழி போராட்டத்தை கதைக்களமாக கொண்டு வரலாற்று சம்பவங்களை மேற்கோள் காட்டி, ஜனரஞ்சகமான அதே நேரம் வரலாற்று பிழை இல்லாத ஒரு திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அந்த காலத்தில் தமிழகத்தில் மிக வீரியமாக நடைபெற்ற மாணவர் போராட்டத்தை தனது செழியன் கேரக்டர் மூலம் சிவகார்த்திகேயன் சிறப்பான நடித்து நியாயம் சேர்த்துள்ளார். ஸ்ரீ லீலா அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கிரே ஷேடு கலந்த கேரக்டரில் ரவி மோகன் சிறப்பாக நடித்துள்ளார்.அதர்வா தனது வேலையை சரியாக செய்துள்ளார். இவர்களை தவிர அரசியல் தலைவர்களாக நடித்துள்ளவர்களும் கச்சிதமாக அந்த கேரக்டரில் பொருந்தி உள்ளனர். ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு நம்மை 60 களுக்கு அழைத்து செல்கிறது. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்துள்ளது. தமிழ் மொழிக்காக மாணவர்கள் செய்த தியாகத்தை இந்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர் சார்பில் படத்தை தயாரித்துள்ளார்.
Next Post