ஜனநாயகன் பொங்கல் இல்லாததால் மெர்சல் பொங்கல்!
அட்லீ இயக்கத்தில் விஜய் ட்ரிபிள் ஆக்சனில் நடித்து வெளியான படம் மெர்சல். இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரித்திருந்தார். இந்த படமும் சென்சார் பிரச்சனைகள் சிக்கி பிராணிகள் நல வாரியத்திடமிருந்து சான்று வழங்க கோரி ரிலீஸ் தாமதப்படுத்தி அதன் பின்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாக இருந்தது. சென்சார் சான்று கிடைக்காததால் படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் மெர்சல் படம் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.
Prev Post
Next Post