Take a fresh look at your lifestyle.

சித்தி இத்னானி எடுத்த புது ரூட்

155

சித்தி இத்னானி எடுத்த புது ரூட்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. அதன்பிறகு முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதோடு ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தில் நடித்து முடித்தார். பல்வேறு காரணங்களால் அந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்த ரெட்ட தல படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது. இருப்பினும் முதல் படத்தை தவிர மற்ற படங்கள் பெரிதாக ஓடாததால் சித்திக்கு தமிழில் புதிய வாய்ப்புகள் வரவில்லை. இதனால் இனி நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து தமிழில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.