கொம்பு சீவி -விமர்சனம்
சரத்குமாரும்,சண்முக பாண்டியனும் ஊரில் கஞ்சா கடத்தி பணம் சம்பாதித்து, பல்வேறு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். இதனால் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தார்ணிகா போடும்,சதி திட்டத்தில் சிக்கி இருவரையும் என்கவுண்டர் செய்ய திட்டம் தீட்டுகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை. வைகை அணை கட்டும் போது 12 கிராமங்கள் அகற்றப்பட்டன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் இன்றைய நிலையை காமெடி கலந்து தமாசாக சொல்லி உள்ளார் இயக்குனர் பொன்ராம். படத்தின் மொத்த பாரத்தையும் சரத்குமார் தாங்கியுள்ளார். ஹீரோவுக்கு துணையாக படம் முழுவதும் ட்ராவல் செய்கிறார். சண்முக பாண்டியன் நடிப்பில் சற்று தேறி இருந்தாலும், இன்னும் அவர் முயற்சி செய்யலாம். அறிமுக நடிகை தாரணிகா நடிப்பு ஓகே. படத்திற்கு பெரிய பிளஸ் யுவன் சங்கர் ராஜாவின் இசை. இருப்பினும் திரைக்கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
Prev Post
