ராணுவ அதிகாரியாக கலக்கும் கன்னட நடிகை அத்விதி ஷெட்டி
ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ :பேஸ் ஒன் – தி அரைவல்’ .இப்படத்தை அறிமுக இயக்குநர் மிலோ இயக்குகிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் பேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது . இதில் கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார்.இதில் நடித்த அனுபவம் குறித்து அத்விதி ஷெட்டி கூறும் போது, நான் கடந்த 11 ஆண்டாக கன்னட படங்களில் நடித்து வருகிறேன்.பல விருது பெற்ற படங்களிலும், வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ளேன். சமீபத்தில் வெளியான 2 படங்களில், துளு மொழிப் படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதோடு நான் ஒரு நடனக் கலைஞரும் கூட , கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கில் 5 நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று உள்ளேன். தற்போது ‘நோவா’ படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்துள்ளேன்.இதில் வல்லபி என்ற ராணுவ அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளேன். இதுவரையிலான எனது திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இதுதான். எனக்கு தமிழ் நல்லா புரியும், அதனால் தமிழ் படம் நிறைய பார்ப்பேன். தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்புகிறேன்.
பாட்டி முகத்தைக் கூட பார்க்க முடியல..!
படப்பிடிப்பின் நடுவில் என் பாட்டி காலமானார்.முக்கியமான காட்சியில் நடிக்கவேண்டி இருந்ததால் முதலில் அந்தக் காட்சியை முடித்தேன். அதன் பிறகு மங்களூருக்குச் சென்றேன். அதிலும் மூணாரில் இருந்து கொச்சி, பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் என் பாட்டியின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை.
விடிய விடிய மழையில் நின்றேன்!!
நான் நடித்த முதல் காட்சி மழையில் படமாக்கப்பட்டது. மூணாறில் கடும் குளிரில் இரவு முழுவதும் கொட்டும் மழையில் நனைந்தபடி நடித்தது மறக்க முடியாத அனுபவம்.
