ப்ராமிஸ் -விமர்சனம்
டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் அருண்குமார்,கல்லூரி மாணவி நதியா சோமு காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களின் வாழ்க்கையில், அவரின் குடிப்பழக்கத்தால் திசை மாறுகிறது.அதோடு அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவர, அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.அதன் பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. குடிப்பழக்கம் மற்றும் எச்.ஐ.வி. பாதிப்பால் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை எப்படி சிதறி சின்னா பின்னமாகிறது என்பதை உணர் வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அருண்குமார் சேகரன் ஹீரோவாக நடித்திருக்கும் அருண்குமார் இயல்பாக வெளிப்படுத்துகிறார். ஹீரோயினாக நதியா சோமு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளார்.மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். வினோத் குமாரின் ஒளிப்பதிவு,சரவண தீபனின் இசை பலம்.