Take a fresh look at your lifestyle.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படம் ஜூலை 10 ல் ரிலீஸ்

42

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படம் ஜூலை 10 ல் ரிலீஸ்
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. 2 எம் சினிமாஸ் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி.ஷபரீஷ் தயாரித்துள்ள இதில் வெற்றி, பிரிகிடா சாகா,மாறன் சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, அருவி மதன், கவிதா பாரதி, சுப்பிரமணிய சிவா உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் ஜூலை 10ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் படம் பற்றி இயக்குனர் தயாள் பத்மநாபன் கூறியது, ‘ உண்மைச் சம்பவங்களை அடிப்பைடயாகக் கொண்ட இந்தப் படம், 1972-ம் ஆண்டு பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.மரண தண்டைனக் கைதியின் வாழ்க்கையில் ஒரு இரவை மையமாகக் கொண்டு,அவன் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் கதையாக இது எடுக்கப்பட்டுள்ளது என்றார்.