Take a fresh look at your lifestyle.

தமிழுக்கு வரும் ஜான்வி கபூர்

11

தமிழுக்கு வரும் ஜான்வி கபூர்
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் பாலிவுட் மற்றும் தெலுங்கு திரைஉலகில் நடித்து வருகிறார். ஆனால் அவரது தாய் ஸ்ரீதேவியின் தாய்மொழியான தமிழில் இதுவரை அவர் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. அவர் எப்போது தமிழ் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. அதை பூர்த்தி செய்ய விதமாக புதிய வெப் தொடரில் அவர் நடிக்க இருக்கிறார். களவாணி, வாகை சூடவா போன்ற படங்களை இயக்கிய
இயக்குனர் சற்குணம் இயக்கும் குரத்தி வெப் தொடரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மாறுபட்ட கதைக்களத்தை கொண்ட இந்த தொடரை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஸ ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.