Take a fresh look at your lifestyle.

மீண்டும் அல்லு அர்ஜுன்ண படத்தில் ராஷ்மிகா

14

மீண்டும் அல்லு அர்ஜுன்ண படத்தில் ராஷ்மிகா
அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் பிரமாண்டமான இன்டர்நேஷனல் ஆக்சன் படமான ‘ராக்கா’வில் ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை விரைவில் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘புஷ்பா’மற்றும் ‘புஷ்பா- 2’ ஆகிய பிளாக் பஸ்டர் படங்களுக்கு பிறகு அல்லு அர்ஜுனுடன் மூன்றாவது முறையாக ராஷ்மிகா மந்தனா இணைய உள்ளார். இதில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் நிலையில் ராஷ்மிகா மந்தனா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘ரணபாலி’ மற்றும் ‘மைசா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.