கடவுளின் ஆகச்சிறந்த படைப்பு பெண்கள்: நமீதா,
தாங்கள் சார்ந்து இருக்கும் துறையில் சாதித்து வரும் பெண்களை அடையாளம்
கண்டு, கௌரவிக்கும் நோக்கத்தில் ஜெரோ மகளிர் விருது வழங்கும் விழா சென்னையி ல் நடந்தது.இந்த விழாவில் பங்கேற்ற நடிகை நமீதா பேசியது, கடவுளின் ஆகச் சிறந்த படைப்பு பெண்கள் தான். பெண்களிடம் அளவில்லாத சக்தி,கருணை மற்றும் உறுதி இருக்கிறது.அவர்கள் மனதில் நினைக்கும் எதையும் சாதிக்க முடியும். குறிப்பாக,பெண்களுக்கு அவர்கள் குடும்பம் ஆதரவு தரும்போது இந்த வெற்றி இன்னும்
பன்மடங்காகும்.ஏனெனில், பெண்கள்
குடும்பத்திற்காக நிலவிற்கும் செல்வார்கள்.
தேவையென்றால் நிலவையும் கொண்டு வருவார்கள். எனவே அந்த குடும்பத்தின் ஆதரவு பெண்களுக்கு முக்கியம்.பெண்கள் வெற்றி பெறும் போது, அந்த வெற்றிக்கான முழு அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றார்.
Prev Post
Next Post