Take a fresh look at your lifestyle.

வடம்- விமர்சனம்

102

வடம்- விமர்சனம்
ஊர் பெரியவராக இருக்கும் ஆடுகளம் நரேன் வளர்க்கும் மாடுகளில் ஒரு காளை மீது அவர் மகனான விமலுக்கு தனி பாசம். அந்த காளையை மஞ்சு விரட்டு போட்டிக்காக தயார்படுத்தி, பல போட்டிகளில் வெற்றி பெற்று ஊரே பேசும் அளவுக்கு பெயர் வாங்குகிறார். விமலின் வெற்றியை சகிக்க முடியாத நட்டி,அந்த காளையை கைப்பற்ற பல தந்திர வேலைகளை செய்கிறார்.அந்த பகை, ஒரு கட்டத்தில் மோதலாக மாறுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை.கிராமத்து இளைஞனாக முறுக்கு மீசையுடன் விமல் அசத்துகிறார். அவருக்கு போட்டியாக நட்டி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நரேன் நடிப்பு படத்திற்கு பலம். முனிஷ் காந்த் தனது காமெடி மூலம் சிரிக்க வைக்கிறார். சனஷ்கா ஸ்ரீ அழகு தேவதையாக வந்து செல்கிறார். இந்துமதி,தீபா சங்கர், பால சரவணன், மதுசூதனன் ராவ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். வீரமும் மனிதர்களின் மரியாதையும் மோதும் கிராமத்து கதையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கேந்திரன். இமான் இசை, பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.