பாலிவுடில் என்ட்ரியாகும் பிரீத்தி முகுந்தன்
தமிழில் கவின் ஜோடியாக ‘ஸ்டார்’ படத்தில் நடித்தவர் ப்ரீத்தி முகுந்தன். தொடர்ந்து அதர்வாவுடன் ‘இதயம் முரளி’, ஹரீஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். மலையாளம் மற்றும் தெலுங்கிலும் பிஸியாக இருக்கும் இவர் தற்போது பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகும் ‘நாகஸில்லா’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். முதலில் இதில் நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது ப்ரீத்தி முகுந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. நகைச்சுவையுடன் கூடய பேன்டஸி படமாக உருவாகும் இதில் கார்த்திக் ஆர்யன் இச்சாதாரி நாக மாக நடிக்கிறார்.