செல்வராகவனின் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான திரைக்கதைக்காக அறியப்பட்டவர்.அவரது பிறந்தநாளை முன்னிட்டு மனிதன் தெய்வமாகலாம் பட டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார். விஜயா சதிஷ் மற்றும் ஆர்.எஸ்.சதிஷ் ஆகியோர், வயோம் என்டர்டைன்மெண்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.இதில் செல்வராகவன், குஷி ரவி,ஆர்.எஸ்.சதிஷ், கௌசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், சுதா, ஜோதிகண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏகே பிரியன் இசையமைக்க, ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Prev Post