Take a fresh look at your lifestyle.

50 கோடி வசூலை அள்ளிய தாய் கிழவி

125

50 கோடி வசூலை அள்ளிய தாய் கிழவி
அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த 27-ந் தேதி வெளியான படம் ‘தாய் கிழவி’.இப்படத்தை எஸ் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இரண்டாவது வாரமும் அனைத்து தியேட்டர்களிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் 10 நாட்களில் இப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நல்ல கதை அம்சத்துடன் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது இயக்குனரின் திறமையை காட்டுகிறது.