நயன்தாராவின் மிரட்டல் லுக் வெளியீடு
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பேட்ரியாட்’. இதில் மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் இணைந்து நடிக்க, ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ராஜீவ்மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.ரேவதி, கிரேஸ் ஆண்டனி, சங்கீதா,ஸ்ரீபார்வதி தர்சனா ராஜேந்திரன் மற்றும் செரீன் ஷிஹாப் ஆகியோரும்
நடித்துள்ளனர்.இந்நிலையில் பெண்கள் தினத்தையொட்டி படத்தில் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசை அமைக்கிறார், ஆண்டோ ஜோசப் தயாரித்து வரும் இந்த படம் வரும் ஏப்ரல் 23-ந் தேதி வெளியாகிறது.