இன்வெஸ்டிகேஷன் திரில்லருக்கு பூஜை போட்டாச்சு!!
‘இறுதிப்பக்கம்’ மற்றும் ‘டியர் ரதி’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, இன்சோ மேனியாக் ட்ரீம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது 3-வது படத்தை துவக்கியுள்ளது.
மர்டர் மிஸ்டரியான ‘இறுதிப்பக்கம்’ படத்தை இயக்கிய மனோ வெ கண்ணதாசன் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இன்வெஸ்டிகே ஷன் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. இதில் குமரன் தங்கராஜன், ஸ்மேகா நடிக்க, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். மேலும்,அபிஷேக் ஜோசப் சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். திருச்சி மற்றும் பெரம்பலூரில் பகுதியை சுற்றியே கதை நகர்வதால் அங்கேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய,ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இப்படம் நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.
Prev Post
Next Post