‘ சிட்டுக்குறிஞ்சி ‘படத்துக்கு 80 ஏக்கரில் கிராமத்து செட்
பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிட்டுக் குறிஞ்சி’. இதில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடிக்க,அவருடன் தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே. பப்பு, ஜி. எம். குமார், எல். வி. ஆதவன், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, ஈஸ்வர்பாபு, சத்யசீலன், வேளச்சேரி ஸ்ரீதர், மஞ்சு, ஜோன்ஸ், கிருஷ்ணகுமார், அட்வகேட் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீராம் கார்த்திக் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைக்க, பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.1983-ஆம் ஆண்டை மையமா கக் கொண்டு உருவாகும் இப்படத்திற்காக, கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதி யில் சுமார் 80 ஏக்கரில் மிகப்பெரிய கிராம செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. காதல்,காமெடி, பேன்டஸி அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.
Next Post