அப்செட்டில் ஊர்வசி ரவுதேலா
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலா
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்
கலந்து கொள்ள லண்டனுக்கு
சென்றிருந்த போது விமான
நிலையத்தில் அவரின் ரூ.70 லட்சம்
மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அப்செட் ஆன அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,“லண்டன் கேட்விக் விமான
நிலையத்தில் பேக்கேஜ் பெல்ட்
பகுதியில் இருந்து என் ரூ.70 லட்சம்
மதிப்புள்ள நகைகள் கொண்ட
சொகுசு சூட்கேஸ் திருடப்பட்டுள்ளது.
பேக்கேஜ்களுக்கான டேக் மற்றும்
டிக்கெட் இருந்த போதிலும் பெல்ட்
பகுதியில் இருந்து பை காணாமல்
போனது பாதுகாப்பு மீறலை
குறிக்கிறது என தெரிவித்துள்ளார்


