Take a fresh look at your lifestyle.

கொலை செய்யப்பட்ட வி.சி.க. பெண் கவுன்சிலர்

6

கொலை செய்யப்பட்ட வி.சி.க. பெண் கவுன்சிலர்

திருநின்றவூரில் 2025 ஜூலை நான்காம் தேதி வி.சி.க. பெண் கவுன்சிலர்கோமதிஎன்பவர் கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் என்பவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த கள்ளக்காதலன் அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவனை இன்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் ஆஜராக வந்த போது கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் கூலிப்படையுடன் ஒரு ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் ஜோசப்பை கொலை செய்ய வந்தபோது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு தனி படை போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது கூலிப்படையில் இருவர் மட்டும் சிக்கினார்கள் . ஸ்டீபன் ராஜ் உட்பட பலர் தப்பிஓடிவிட்டனர். கூலிப்படையினர் வந்த ஆட்டோ, மற்றும் ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பட்டாக்கத்திகள் மிளகாய் பொடி பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து சிக்கிய இருவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.