Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில், சில முக்கியமான கோவில்களில் யானைகள் வாங்க, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.

2

தமிழகத்தில், சில முக்கியமான கோவில்களில் யானைகள் உள்ளன. தமிழக கோவில்களுக்கு 10 ஆண்டுகளாக யானைகள் வாங்கப்படவில்லை.

இந்நிலையில், சில கோவில்களில் யானைகள் இறந்ததால், புதிய யானைகள் வாங்க, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.

அசாமில் உள்ள தனியார் உரிமையாளர்களிடம் இருந்து, தமிழக கோவில்களுக்கு, யானைகள் வாங்க அனுமதி கோரி வனத்துறையிடம் விண்ணப்பித்தது.

அசாம் மாநிலத்திலிருந்து ஐந்து வளர்ப்பு யானைகளை, தமிழகம் வாங்கி வர, இரு மாநில வனத்துறைகளும் ஒப்புதல் வழங்கயது.

யானைகள் கொண்டு வரப்படும் கோவில்களில், அவற்றை பராமரிக்க தேவையான அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்து, மாவட்ட வன அலுவலர் தலைமையிலான குழு, நேரில் சென்று கள ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதன் அடிப்படையில் அசாமின், ‘மானஸ்’ தேசிய பூங்காவில் இருந்து, ‘துர்கா’ என்ற ஐந்து வயது பெண் யானை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மேலும் ஒரு பெண் யானை உட்பட நான்கு யானைகள் தமிழகம் வந்தது .

இந்நிலையில் காஞ்சி சங்கர மடத்திற்கு நேற்று இரவு பிஜிலி என்ற ஐந்து வயது யானை ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கர மடத்திற்கு சொந்தமான யானை பராமரிப்பு வளாகமான கஜசாலைக்கு வந்து சேர்ந்தது.

பல ஆண்டுகளுக்கு பின், கோவில்களுக்கு புதிய யானைகள் கொண்டு வரப்படுவது பக்தர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக இந்து அறநிலையத்துறை உத்தரவின் பேரில் , அசாமில் இருந்து காஞ்சி சங்கர மடத்திற்கு பிஜிலி யானை கஜ சாலை பராமரிப்பு வளாகத்திற்கு வந்து சேர்ந்தது