Take a fresh look at your lifestyle.

யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளை

9

யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் விஐபி கார்டன் பகுதியில் வசித்து வரும் பிரபல யூடியூபர் மதுமிதா தம்பதியின் பூட்டிய வீட்டில், நேற்று இரவு பின்பக்க கதவின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் சுமார் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; “நாங்கள் மாதம் மாதம் தங்கம் வாங்குவோம், நீங்களும் வாங்குங்கள்” என்று பெருமையாகப் பேசித் தங்களிடம் உள்ள ஏராளமான நகைகளைத் தொடர்ந்து யூடியூப் வீடியோக்களில் காட்டி வந்ததே இந்தத் துணிச்சலான கொள்ளைக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது; இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.