ஊட்டியில் ஓய்வெடுக்கும் எஸ் கே
சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் “சேயோன்”. பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தற்போது ஊட்டிக்குச் சென்றிருக்கும் சிவகார்த்திகேயன், அங்கே ரிலாக்ஸ் ஆக தான் இருப்பது போன்று சில புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, “ஒரு சிறிய இடைவெளி.., ஒரு தென்றல் காற்று.., கொஞ்சம் அமைதி..” என்கிற வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ஒரு சிறிய இடைவெளிக்காக சிவகார்த்திகேயன் ஊட்டி சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் ஊட்டியில் நடக்க இருப்பதால் அவர் அங்கே தங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Prev Post
