Take a fresh look at your lifestyle.

கார்த்தி படத்தில் இணைந்த டிஎஸ்பி

36

கார்த்தி படத்தில் இணைந்த டிஎஸ்பி
வா வாத்தியார் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி சர்தார் – 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 10 ல் வெளியாகவுள்ளது.அடுத்து இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் படத்திலும் நடித்து வருகிறார். இது பெரிய பட்ஜெட்டில் பீரியட் படமாக உருவாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் 30-வது படத்தில் கல்யாண் சுந்தர் இயக்குகிறார். இவர் மேட் திரைப்பட பாகங்களை இயக்கியவர்.சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில், நாயகியாக மீனாக்‌ஷி சௌத்ரி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. விரைவில் ஷூட்டிங் துவங்க உள்ள நிலையில் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.