Take a fresh look at your lifestyle.

தக்லைப் படத்தின் மற்றொரு சர்ச்சை

162

தக்லைப் படத்தின் மற்றொரு சர்ச்சை
மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்த
தக் லைப் படம் வரும் 5ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே வெளியான இதன் ட்ரெய்லரில் கமல் -அபிராமி முத்த காட்சி விவாதத்தை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து பெங்களூரில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி அங்கு படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் முத்தமழை என்ற பாடலை பாடகி சின்மயி மேடையில் பாடினார். ஆனால் படத்தில் ஒரிஜினலாக பாடியிருப்பது பாடகி தி ஆகும். இவரை விட சின்மயி பாடிய பாடல் மிகவும் சூப்பராக இருப்பதால் பாடகரை மாற்றும்படி இணையத்தில் கோரிக்கைகள் கிளம்பின. இதனால் மணிரத்தினம் டென்ஷன் ஆகி தயவு செய்து ரசிகர்கள் புதிய சர்ச்சையை கிளப்பாதீர்கள் என கூறியுள்ளார்.