பேரனை பார்த்து ரஜினி நெகிழ்ச்சி
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி சமீபத்தில் கோர்ட்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் மூத்த மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் மீண்டும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இது குறித்து ரஜினி தனது எக்ஸ் தளத்தில் இந்த போட்டோவை பகிர்ந்து, ‛‛என் அன்பான பேரன் முதல் மைல்கல்லை கடந்து விட்டான். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.