Take a fresh look at your lifestyle.

நாகர்கோவிலை கலக்கிய லிங்கம் மனைவி ரோகினியாக மாறியது எப்படி?: திவ்யபாரதி மனம் திறந்த பேட்டி

54

நாகர்கோவிலை கலக்கிய லிங்கம் மனைவி ரோகினியாக மாறியது எப்படி?: திவ்யபாரதி மனம் திறந்த பேட்டி

பிரபல மாடல் அழகியாக இருந்த திவ்யா பாரதி, ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சிலர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் நடித்தார். அதன் பிறகு மீண்டும் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து கிங்ஸ்டன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும் கடந்த ஆண்டு மதில் மேல் பூனை என்ற படத்தில் நடித்தார். தற்போது ஆசை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதோடு ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக பிரபல எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் கதிர் ஹீரோவாக நடித்துள்ள லிங்கம் என்ற வெப் தொடரில் கதை நாயகியாக நடித்துள்ளார். இந்த சீரிஸ் இன்று முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த தொடர் குறித்தும், தனது திரை வாழ்வு குறித்தும் திவ்ய பாரதி கூறியது வருமாறு:- தமிழில் ஐந்து படங்களுக்கு பிறகு நான் நடிக்கும் முதல் வெப் தொடர இது. இந்த கதையை இயக்குனர் என்னிடம் சொன்னவுடன் இதில் நடித்துவிட முடிவு செய்தேன். நாகர்கோவில் பகுதியில் போலீசாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த ஒருவர் எப்படி ரவுடியாக மாறினார். அந்த மாற்றத்தினால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் எந்த மாதிரியான மனநிலையில் இருந்தனர் என்பதை இயக்குனர் சொன்னவுடன் அந்த லிங்கத்தின் மனைவி ரோகினி கேரக்டரில் நடித்துவிட முடிவு செய்தேன். அவ்வளவு ஒரு போல்டான கேரக்டர் அது. அதற்காக எனது நடை உடை பாவனைகளை மாற்றி நடித்துள்ளேன்.1990களில் நடக்கும் உண்மை சம்பவங்களின் பின்னணியில், ஒரு கபடி வீரர் எதிர்பாராத விதமாக குற்ற உலகிற்குள் நுழைந்து கேங்ஸ்டராக மாறும் பயணத்தை அழகாக சொல்லி உள்ளார். நிச்சயம் இது ரசிகர்களை கவரும். அடுத்ததாக தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவருடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளேன். தமிழில் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.