மனு -விமர்சனம்
சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீயுத், கோடீஸ்வர வீட்டு பெண்ணான ரேஷ்மாவை காதலிக்கிறார். சாதி பாகுபாடு பார்க்கின்ற அரசியல்வாதியான ரேஷ்மாவின் அப்பா விஜய் செல்வம், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உடனே இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்கின்றனர். இதனால் கோபத்தில் உச்சத்துக்கு செல்லும் விஜய் சங்கர் அவர்களை என்ன செய்தார்? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. காலம் காலமாக காதலர்களை துரத்துகிற பிரச்சனைகளும் அதைத் தொடர்ந்து நகரும் போராட்டங்களும் கொண்ட பார்த்துப் பழகிய பழைய டெம்பிலேட் கதையை இயக்குனர் துர்கா பி.எஸ் சொல்லி இருக்கிறார். இருப்பினும் ஆணவக் கொலை செய்தவரின் மனசு அவர்களை எப்படி வாட்டி வதைக்கும் என்பதை காட்டி இருப்பது சிறப்பு. ஸ்ரீயுத் முடிந்தவரை நடிக்க முயற்சி செய்துள்ளார். ரேஷ்மா காதலையும்,சோகத்தையும் காட்டி நடித்துள்ளார். அம்பலத்துக்காரராக வரும் விஜய் செல்வம் மிரட்டி இருக்கிறார். மற்ற நடிகர்களும் நடிக்க முயற்சி செய்துள்ளனர். வீனஸ் மூர்த்தி, மாரி செல்வராஜ் ஒளிப்பதிவு மற்றும் ஹர்ஷா கோகாட் இசை சுமார் ரகம்.
Prev Post