‘ ரசகுல்லா..’ பாடலில் நயன்தாரா
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள ‘ஹாய்’ படத்தில் நயன்தாரா லீடு ரோலில் நடித்துள்ளார்.அவருடன் முதன் முதலாக கவின் நடித்திருக்கிறார்.ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய,ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.பீல் குட் பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஆகஸ்ட்14ம் தேதி வெளியாக உள்ள இதில் இடம்பெற்ற ‘ கன்னக் குழியா..’ என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் 2வது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.இந்தப் பாடலை இயக்குனர் விஷ்ணு எடவன் எழுத அனிருத் பாடியிருக்கிறார்.
Next Post