ஹாட்ரிக் ரிலீஸ், மகிழ்ச்சியில் மமிதா பைஜூ
டியூட் படத்துக்கு பிறகு நடிகை மமிதா பைஜூவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில் ரிலீசான கர படத்தில் தனுஷ் உடன் நடித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யுடன் அவர் நடித்த ஜனநாயகன் படம் இன்று 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அடுத்து ஆகஸ்ட் 14 ம் தேதி சூர்யாவுடன் அவர் நடித்துள்ள விஸ்வநாதன் அண்டு சன்ஸ் படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதோடு மலையாளத்தில் நிவின் பாலியுடன் அவர் நடித்துள்ள பெத்லஹேம் குடும்ப யூனிட் படம் ஆகஸ்ட் 21 வெளியாக உள்ளது. இப்படி வரிசையாக மூன்று படங்கள் ரிலீஸ் ஆவதால் மமிதா மகிழ்ச்சியில் உள்ளார்.
Prev Post
Next Post