புதிய ரியாலிட்டி ஷோவில் யுவன்
தமிழ் சுயாதீன இசை கலைஞர்களுக்காக ஒரு பிரத்யேக மேடை கிடைத்துள்ளது. ஐ பாப் ஸ்டார் தமிழ் என்ற ஒரு புதிய இசை ரியாலிட்டி ஷோவை ஆல்ரைட் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.அசல் தமிழ் இசையை மையமாகக் கொண்ட இந்த புதிய இசை ரியாலிட்டி ஷோவில் சக்திஸ்ரீ கோபாலன், அசல் கோலார் மற்றும் அந்தோணி தாசன் ஆகியோர் நடுவர்களாக இருக்க, சூப்பர் மென்டராக யுவன் சங்கர் ராஜா வழிநடத்து கிறார். நிகழ்ச்சியை குரோஷி மற்றும் சாம் விஷால் ஆகியோர் தொகுத்து வழங்க, சத்யா பிரகாஷ் இசை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.இந்த நிகழ்ச்சி ஆல்ரைட் டிவியில் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், மீடியா மேஷன்ஸ் யூடியூப் சேனலில் வியாழன் மற்றும் சனிக் கிழமையில் ஒளிபரப்பாகும்.
Prev Post