Take a fresh look at your lifestyle.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் உயர்த்தும் தொண்டர்!

4

தன் சுயநலத்திற்காகவும், முதலமைச்சர் பதவி ஆசைக்காகவும் மட்டுமே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.”

மேலும் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பொதுக்குழுவைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமியையே அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும்.”அஇஅதிமுகவிலிருந்து நீக்கம்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் உயர்த்தும் தொண்டர்!

“அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஒருவர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”

“அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தம்மை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அக் கட்சியின் தொண்டர், ‘கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும்; அதிமுகவைப் பலப்படுத்த வேண்டும்’ என்று சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டதற்காகத் தன் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அவர்களின் காலத்தில் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மட்டுமே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சி ஒன்றாக வேண்டும் என்று கோரிக்கை வைத்ததற்காகத் தமக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ஜெயலலிதா அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, சிறுவயது முதலே கட்சிப் பணிகளுக்காக உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் உழைத்த பல முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கி வருவதாக அவர் சாடியுள்ளார்.”மேலும் “தன் சுயநலத்திற்காகவும், முதலமைச்சர் பதவி ஆசைக்காகவும் மட்டுமே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.”
கட்சியைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி இத்தனை பேரை நீக்குவதற்கு பதிலாக, உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பொதுக்குழுவைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமியையே அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும்.”
எம்.ஜி.ஆர் உருவாக்கிய, ஜெயலலிதா காத்த இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமியிடமிருந்து காப்பாற்றி, மீண்டும் மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக மாற்ற அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும்.” “அதிமுகவில் அடுத்தடுத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீக்கப்பட்டு வரும் சூழலில், பொதுச்செயலாளருக்கு எதிராகவும், பொதுக்குழுவைக் கூட்ட வலியுறுத்தியும் வெளிவந்துள்ள இந்த வீடியோ பதிவு கட்சி வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது