திண்டுக்கல் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது – பட்டாகத்தி பறிமுதல்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி ரோடு ரயில்வே கேட் அருகே சத்தம் போட்டு கொண்டு பட்டாகத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த நல்லாம்பட்டி ஒடுக்கம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார்(எ) உதயா(31) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாகத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்