Take a fresh look at your lifestyle.

திரைவி -விமர்சனம்

135

திரைவி -விமர்சனம்
ஒரு பெரிய வீட்டுக்குள் ஆஷ்னா சவேரி தற்கொலை செய்து கொள்ள விஷத்துடன் தயாராகிறாள். அந்த நேரம் பார்த்து ஒரு திருடன் வீட்டுக்குள் நுழைகிறான். அவனை பார்த்து அதிர்ச்சியில் விஷம் இருக்கிற பாட்டில் உடைந்து விட, தன் கையிலிருக்கும் துப்பாக்கியைக் கொடுத்து தன்னை சுட சொல்கிறார். அவன் மறுக்கிறான். ஆனால் விடாது அவரை சுட சொல்கிறார்.அதன் பின்பு என்ன நடந்தது என்பது படத்தின் மீதி கதை.
சூழ்நிலை தான் மனிதர்கள் நல்லவராகவும், கெட்டவர்களாகவும் மாறுவதற்கு காரணமாக அமைகிறது என்ற கருத்தை விறுவிறுப்பான திரில்லர் படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்தி தட்சிணாமூர்த்தி.
துறுதுறு நடிப்பால் ஆஷ்னா சவேரி கவர்ந்து உள்ளார். ஆஷ்னாவின் கணவராக ‘முருகா” அசோக் மனைவியைக் கொடுமைப்படுத்து பவர், மனைவியால் கொடுமைகளை அனுபவிப்பவர் என இரண்டு விதமான நடிப்புப் பங்களிப்பை தந்திருக்கிறார்.
திருடனாக வரும் முனீஷ்காந்த்,நிழல்கள் ரவி, வினோத் சாகர், ஷரவண சுப்பையா, ராட்சசன் சரவணன், ஆர்.எஸ். நித்தீஷ், அஸ்மிதா ஆகியோர் வந்து போகிறார்கள். ஆர்.அதிசயராஜின் ஒளிப்பதிவு,என்.டி.ஆர் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.