Take a fresh look at your lifestyle.

தனுசுக்கு ஜோடியான ரவுடி பேபி

127

தனுசுக்கு ஜோடியான ரவுடி பேபி
‘அமரன்’ படத்திற்கு பிறகு ராஜ்குமார் பெரிய சாமி தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படம் அவரின் 55 வது படமாக உருவாகிறது. ஏற்கனவே படத்தின் இசையமைப் பாளராக சாய் அபயங்கர் இணைந்த நிலையில், நடிகை ஸ்ரீ லீலா ஹீரோயினாக கமிட்டானார். இந்த நிலையில் மற்றொரு ஹீரோயினாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி யுள்ளார். நேற்று முன்தினம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மாரி படத்தில் தனுஷ் சாய் பல்லவி ஜோடி பட்டையை கிளப்பியது. ரவுடி பேபி பாடலுக்கு அவர்கள் ஆடிய நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதுவரை பல மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாகவும் அது உள்ளது குறிப்பிடத் தக்கது.