மீண்டும் இணையும் ‘குப்பி’ கூட்டணி
மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,அப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் மீண்டும் இணைந்துள்ள செய்தி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம், இருவரின் திரைப் பயணத்திலேயே மிக அதிக பொருட் செலவில் உருவாகும் பிரம்மாண்ட படமாக இருக்கும் எனத் தெரியவருகிறது. இவர்களுடன் ‘குப்பி’ படத்தில் நடித்த சேத்தன் ஜெயலாலும் இப்புதிய படத்தில் இணையவுள்ளார்.இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.