Take a fresh look at your lifestyle.

‘ சிக்மா’ படம் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்: சந்தீப் கிஷன்

1

‘ சிக்மா’ படம் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்: சந்தீப் கிஷன்
தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிக்மா இதில் சந்தீப் கிஷனுடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ் பண்டிட், அன்பு தாசன் மற்றும் யோக் ஜேப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.எபிசோடிக் ஆக்‌ஷன் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று 2ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் அளித்த பேட்டி வருமாறு-
கே:‘சிக்மா’ படத்தைப் பற்றி சொல்லுங்க…
ப:இது ஒரு எபிசோடிக் ஆக்‌ஷன் காமெடி திரைப்படம் . ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்து அம்சங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளது, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும்.

கே:இயக்குநர் ஜேசன் சஞ்சயுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி?
ப: சஞ்சய் மிகவும் இனிமையான மனிதர் . அவருடன் இரண்டு மணி நேரம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தாலே அவரைப் பற்றி இதே கருத்தை பலரும் கொண்டிருப்பார்கள்.இயக்குநராக ஜேசன் சஞ்சயிடம் எனக்கு பிடித்தது அவரது தொழில்முறை அணுகுமுறைதான். திரைக்கதை உருவாக்கும் கட்டத்திலிருந்தே சஞ்சய் மிகவும் கடினமாக உழைத்தார். படப்பிடிப்பு தொடங்கிய பின்னரும் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் கையாண்டார்.

கே:கதைகளை தேர்வு செய்யும் விதம் பற்றி..
ப: ஒரு கதையை கேட்டவுடன் அது பிடித்திருந்தால் உடனடியாக முடிவெடுக்கும் பழக்கம் எனக்கு உண்டு. கதை பிடித்திருந் தால் ஓகே சொல்வதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்வதில்லை.திரையுலகில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இதுவரை செய்யாத கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.அந்த வகையில், ‘சிக்மா’ எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கியிருக்கிறது என்றார்.

முதல்வர் விஜய் படம் பார்ப்பாரா ?
கடந்த சில நாட்களாக புரமோஷனுக்காக ஊர் ஊராக சுற்றி வருகிறோம். ஹீரோயின் உட்பட எல்லாருக்கும் காய்ச்சல்.ஜேசனுக்கும் வைரல் ஃபீவர். படத்தை முதல்வர் விஜய் பார்ப்பாரா என கேட்கிறார்கள். அவர் படம் பார்க்க வேண்டாம் என யாராவது நினைப்பார்களா. அவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.