Take a fresh look at your lifestyle.

அஜித் பாணியில் பைக் ரேஸில் கலக்கும் கௌதம் ராம் கார்த்திக் 

1

அஜித் பாணியில் பைக் ரேஸில் கலக்கும் கௌதம் ராம் கார்த்திக்
நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கிற்கு சினிமாவைத் தாண்டி விளையாட்டு மற்றும் பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது.படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் நேரங்களில் பைக் ஓட்டுவது, பயிற்சி மேற்கொள்வது என தனது ஆர்வத்தை தீவிரமாக வளர்த்து வருகிறார்.பைக் ஓட்டுவதை வெறும் பொழுதுபோக்காக பார்க்காமல், அதில் இருக்கும் நுணுக்கங்க ளைத் தெரிந்துகொண்டு, மோட்டார் ஸ்போர்ட்ஸில் தன்னை படிப்படியாக தயார்படுத்தி வருகிறார். மோட்டார் சைக்கிள் பந்தயங்களை தொடர்ந்து கவனித்து வரும் அவர், ஒவ்வொரு பயணத்தின் மூலமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறார். இந்த ஆர்வத்தின் மற்றொரு பகுதியாக, தனது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து ஒரு சிறிய ஆவணப்பட வீடியோவை கௌதம் ராம் கார்த்திக் உருவாக்கியுள்ளார். இதில் அவரது மனதுக்கு நெருக்கமான பைக் ‘கோரா’ முக்கிய இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே நடிகர் அஜித் கார் ரேசில் உலகப்புகழ் பெற்று வரும் நிலையில், நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பைக் ரேஸில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.