Take a fresh look at your lifestyle.

‘ டோரதி’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம்: கீர்த்தி சுரேஷ்

1

‘ டோரதி’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம்: கீர்த்தி சுரேஷ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ படம் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், ‘டோரதி’ கதாபாத்திரத்தை தன்னிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்ததற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி. அவரது பார்வையில் உருவான இப்படத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் பெருமை கொள்கிறேன். இளையராஜா இசையில் பணியாற்றியது எனது வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துப் போற்றக்கூடிய அனுபவமாகும்.ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரும் அற்புதமான நடிகர்கள். அதேபோல் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் எனக்கு கொடுத்த அன்புக்கு நன்றி என்றார்.