Take a fresh look at your lifestyle.

13 ஆண்டுகளுக்குப் பிறகு டேக் ஆஃப் ஆன மூடர் கூடம் 2

4

13 ஆண்டுகளுக்குப் பிறகு டேக் ஆஃப் ஆன மூடர் கூடம் 2
கல்ட் கிளாசிக் படமான ‘மூடர் கூடம்’ படம் கடந்த 2013ல் வெளியாகி வரவேற்பை பெற்றது. வினோதமான கதாபாத்திரங்கள், ‌ வித்தியாசமான நகைச்சுவை மற்றும் புதுமையான கதை சொல்லல் ஆகிய காரணத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை இப்படம் பிடித்தது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறுமனே சீக்வல் படமாக இல்லாமல், முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் நவீன் ஹிதயத், ஓவியா, சென்றாயன், ராஜாஜி, குபேரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைத்துள்ளார். கிராண்டல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா தயாரித்துள்ளனர். இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.