Take a fresh look at your lifestyle.

மீசைய முறுக்கு-2 படம் மூலம் என் அம்மாவின் கனவு நனவானது: சைத்ரா

1

மீசைய முறுக்கு-2 படம் மூலம் என் அம்மாவின் கனவு நனவானது: சைத்ரா
ஹிப்ஹாப் ஆதியின் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்து இசையமைத்துள்ள படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி மூவிஸ் தயாரிக்க கேதிகா சர்மா, சைத்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. கானா கலைஞர்கள் பின்னணியில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை சைத்ரா, தனது கேரக்டர் குறித்து பேசுகையில், “தன் கணவருக்காகக் குரல் கொடுப்பவர் லட்சுமி. எது வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாகவும் வெளிப்படையாகவும் இருப்பார். சொல்லப் போனால், இந்தக் கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என படக்குழுவினர் உறுதியாக இருந்தனர். இது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது.என்னுடைய முந்தைய படங்களில் பாடல்கள் பெரும்பாலும் ‘மாண்டேஜ்’ காட்சிகளாகவே அமைந்தன. ஆனால் இந்தப் படத்தில் எனக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உண்மையில் இந்த படத்தைப் பார்க்க என் அம்மாதான் அதிக ஆர்வமாக இருந்தார். ஏனென்றால், எனக்கு ஏன் யாரும் டான்ஸ் ஆடும் வாய்ப்பை வழங்குவதில்லை என்று அவர் எப்போதும் யோசிப்பார்.எனவே, என் அம்மாவின் கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.