சென்னையில் கால்-கை வலிப்பு சங்கம் நடத்திய இகான் மாநாடு
சென்னை,ஆக 24: இந்திய கால்-கை வலிப்பு சங்கத்தின் வருடாந்திர கருத்தரங்கான இகான்-2025 கருத்தரங்கம் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கருத்தரங்கில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னணி நரம்பியல் நிபுணர்கள், வலிப்பு நோய் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை தொடர்புடைய மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் கால்-கை வலிப்பு நோய் குறித்து கண்டறிதல், சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.கருத்தரங்கின் தொடக்க விழாவில் மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநர் ஸ்ரீ கோபாலகிருஷ்ண காந்தி,தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.துவக்க விழாவில் இகான் 2025 ஏற்பாட்டுத் தலைவர் டாக்டர் வி. நடராஜனின் வரவேற்பு உரை வழங்கினார்.ஐ இ எஸ்,ஐ இ ஏ இன் பொது செயலாளர்கள் டாக்டர் பி.சரத் சந்திரா மற்றும் டாக்டர் பி.சதீஷ் சந்திரா ஆகியோர் தலைமை உரையாற்றினர். அதோடு தலைவர்களைக் கௌரவித்தல், நினைவுப் பரிசு வழங்குதல். புத்தகங்கள் வெளியீடு ஆகியவை நடைபெற்றது. விழா முடிவில் செயலாளர் டாக்டர் கே. மால்கம் ஜெயராஜ் நன்றியுரை வழங்கினார்.