Take a fresh look at your lifestyle.

காவேரி மூளை மற்றும் முதுகெலும்பு பிரிவு துவக்கம்

141

காவேரி மூளை மற்றும் முதுகெலும்பு பிரிவு துவக்கம்

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல்,மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சை யகங்களைத் தொடங்கி உள்ளது.
நரம்பியல் அறிவியலில் சிறந்து விளங்குவதற் கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை அண்டு முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக சிறப்பு சிகிச்சையகங்கள் தொடங்கப்படுவதை அறிவிக்கிறது. மேலும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சைகளில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முறையை அறிமுகப்படுத்துதலும் இதில் அடங்கும்.
இவற்றை மனதில் கொண்டு,காவேரி மூளை மற்றும் முதுகெலும்பு பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இப்பிரிவில், முன்னணி நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சையாளர்கள், நரம்பியல் கதிரியக்க நிபுணர்கள், நரம்பியல் உளவியலாளர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், உடலியக்கச்சிகிச்சை யாளர்கள், செவிலியர்கள், இயல்புமீட்பு நிபுணர்கள் என திறமையான மருத்துவக் குழு உள்ளனர். இந்தக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதரின் தலைமையில், ஒருங்கிணைந்த கூட்டுறவு முயற்சியின் மூலமாக பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தடையற்ற ஒருங்கிணைந்த மாதிரி அமைப்பில் இணைந்துள்ளனர்.