Take a fresh look at your lifestyle.

2 ஹிட் படங்களை தவறவிட்ட தேஜு அஸ்வினி

1

2 ஹிட் படங்களை தவறவிட்ட தேஜு அஸ்வினி
யூடியூப் மூலம் பிரபலமாகி ஆல்பங்களால் ஈர்க்கப்பட்டவர் நடிகை தேஜூ அஸ்வினி. ‛பாரிஸ் ஜெயராஜ், பிளாக்மெயில், என்ன சொல்ல போகிறாய்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் தற்போது மூன்றாம் கண் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,
லவ்வர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஒரு சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அதன் பின்னர் அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீ கவுரி பிரியா நடித்திருந்தார் . அதேபோல் டிமாண்டி காலனி 2 படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது.அதிலும் முடியவில்லை. அந்த கதாபாத்திரத்தில் பின்னர் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த இரண்டு வெற்றி படங்களையும் மிஸ் செய்தது சற்று வருத்தம் தான் என்றார்.