Take a fresh look at your lifestyle.

சன்னிதானம் போஸ்ட் ஆபிஸ் – விமர்சனம்

1

சன்னிதானம் போஸ்ட் ஆபிஸ் – விமர்சனம்
வாய் பேச முடியாத சித்தாரா தனது மகன் யோகிபாபுவுடன் சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டி செல்லும் போது, சன்னிதானம் போஸ்ட் ஆபிஸ் அருகில் அவரை தொலைத்து விடுகிறார். காணாமல் போன மகனை பல ஆண்டுகளாக தேடி அலையும் அவர், இறுதியில் மகனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
மகனாக நடித்துள்ள யோகி பாபு தனது இயல்பான நடிப்பால் படத்தை தாங்கிப்பிடிக் கிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். அம்மா கேரக்டரில் சித்தாரா அனுபவ நடிப்பை வெளிப்படுத்து கிறார். சிறுவனாக நடித்துள்ள பேபி ரிஷி, வர்ஷாவிஸ்வநாத், ரூபேஷ் ஷெட்டி, கஜராஜ், பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் தங்களுக்கு
கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.ஒரு எளிமையான கதையை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் அமுதா சாரதி. திரைக்கதை யில் குறைகள் இருந்தாலும், அம்மா-மகன் பாசம், மனிதநேயம் போன்ற அம்சங்கள் ரசிகர்களை ஈர்க்கின்றன.
அருண் ராஜின் இசை மற்றும் வினோத் பாரதி ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.